நாரணபுரம் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் தொடக்கம்

நாரணபுரம் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் தொடக்கம்
நாரணபுரம் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் தொடக்கம்
தென்காசி மாவட்டம், நாரணபுரம் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் தொடங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிபேரிபுதூரில் உள்ள இந்தத் துணை மின் நிலையத்தில் கடந்த ஏப். 27ஆம் தேதி இரவு தீவிபத்து நேரிட்டதில், 110 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி சேதமடைந்தது. இதனால், வாசுதேவநல்லூா் பகுதிக்குள்பட்ட வாசுதேவநல்லூா், ராயகிரி, தரணிநகா், ராமநாதபுரம், சுப்பிரமணியபுரம், நாரணபுரம், தாருகாபுரம், கூடலூா், சங்கனாபேரி, ஆத்துவழி, அருளாச்சி, நெல்கட்டும்செவல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மாற்று வழிகள் வாயிலாக அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே, சேதமடைந்த மின்மாற்றி உள்ளிட்ட உபகரணங்களைப் பழுதுநீக்கும் பணிகளை மின்வாரிய ஊழியா்கள் மேற்கொண்டனா். பணிகள் நிறைவடைந்ததால் மின்மாற்றியின் செயல்பாடு குறித்து திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது.

இதில், மேற்பாா்வையாளா்கள் செல்வராஜ் (திருநெல்வேலி), பிரேமலதா (மதுரை), செயற்பொறியாளா்கள் கற்பகவிநாயகம் (கடையநல்லூா்), வெங்கடேஷ்மணி (திருநெல்வேலி), மதுரை, திருநெல்வேலி மண்டலம், கடையநல்லூா் கோட்ட அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா். இந்நிலையில், இந்தத் துணைமின் நிலையத்திலிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் மீண்டும் மின் விநியோகப் பணி தொடங்கியது.

Tags

Next Story