அதிமுகவுக்கு ஆதரவு: அம்பேத்கர் மக்கள் இயக்கம்
அதிமுக வெற்றிக்காக அம்பேத்கர் மக்கள் இயக்கம் பாடுபடும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் மாநில தலைவர் உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே அ.தி.மு.க.விற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கான ஆதரவு கடிதத்தை பூங்கொத்துடன் எடப்பாடி பழனிசாமியிடம் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை வழங்கினார். மேலும் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடுகின்ற அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக அம்பேத்கர் மக்கள் இயக்கம் தேர்தல் பணியாற்றி பாடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Next Story