இந்தியா கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன்அன்சாரி

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன்அன்சாரி
X

செய்தியாளரை சந்தித்த தமின் அன்சாரி

கேரளா கர்நாடகா ஆந்திரா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி கூறினார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவருமான தமிமுன் அன்சாரி தலைமை தாங்கி பேசினார். மாநில துணைச்செயலாளர் பேராவூரணி சலாம், மாவட்ட செயலாளர் ராயல் ராஜா மற்றும் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் நெல்லை ரமேஷ் மற்றும் நிர்வாகி ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது மனிதநேய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகிறோம்.

தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் பணியாற்ற உள்ளோம். ம.தி.மு.க. முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நீதித்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை அமைப்புகளின் நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு பிரதமரின் சுற்றுப்பயணத்தை பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணியை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்தல் சின்னங்கள் கிடைத்துள்ளது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் அவர்கள் விரும்பிய சின்னங்கள் கொடுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டும் தான்.

கவர்னர் பதவி என்பது ஒரு மாண்பு கொண்ட பதவி, அந்த இடத்தில் இருந்து விட்டு, ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு பதவியை ராஜினாமா செய்வது ஆரோக்கியமானதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story