மதசார்பின்மையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

மதசார்பின்மையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க தமிழகம், புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக பல்சமயநல்லுரவு இயக்க தலைவர் ரபி தெரிவித்தார்.

திருப்பூர் தில்லைநகர் பகுதியில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பல்வேறு மதம் மற்றும் சமூகத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட இந்த சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பல் சமய நல்லுறவை இயக்கத்தின் தலைவர் முகமது ரபி கலந்து கொண்டிருந்தார்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்த அமைதி இப்போது இல்லாத நிலை இருப்பதாகவும் , சிறுபான்மையினருக்கான அச்ச உணர்வு மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக இம்முறை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பதெனவும் , திருப்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கிய மூன்று மாதத்துக்குள் பாஜகவிற்கும் பிரதமருக்கும் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது சிபு சோரான் கைது ஆகியவை நடைபெற்று இருப்பதாகவும் அவையெல்லாம் கண்டனத்திற்குரியது எனவும் , மாநில முதல்வரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கைது செய்வது கூடாது எனவும் தெரிவித்தார். பாஜக தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

Tags

Next Story