வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம் 
சாத்தூர் அருகே துலுக்கன் குறிச்சியில் உள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே துலுக்கன்குறிச்சி யில் உள்ள அருள்மிகு வாழை மர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு க்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் வாழை மர பால சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி அருள்மிகு வாழை மர பால சுப்ரமணிய சுவாமி கோவில் நடைபெற்றது. இதில் பால சுப்ரமணிய சுவாமி கஜ முக சூரன், சிங்கா சூரன், தாரகா சூரன், சூரபத்மனை வதம் செய்து வாழை மர பால சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண வெப்ப கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags

Next Story