சூரசம்ஹார திருவிழா
சூரசம்ஹாரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியமான முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழா,தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்று வருகிறது.மேலும் அம்மன் தினந்தோறும் காமதேனு,பூத வாகனம், ரிஷபம், மயில், குதிரை, யானை உட்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம்இரவு 8-ம் நாள் திருவிழாவில், முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கபட்ட கண்ணாடி தேரில் மாடுகள் பூட்டப்பட்டு நகர் வலம் வந்து கோவிலின் முன்பு சூரசம்ஹாரம் நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தின் போது சூரபத்மன் யானை, அரக்கன், எருமை, ஆடு, குதிரை உள்ளிட்ட 5 தலை கொண்டு அம்மனிடம் போரிடும் நிகழ்ச்சியில், சூரபத்மனை அம்மன் வதம் செய்து சூரசம் ஹாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.