தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.  

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிகடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் பெய்து வரும் கன மழை தாக்கம் காரணமாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

அதிகபட்சமாக மயிலாடி பகுதியில் 103.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது அடுத்ததாக ஆனைகிடங்கு 83.8மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மாவட்டம் முழுவதும்1449.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை45.9 அடி தாண்டி அணைக்கு வினாடிக்கு 2343 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் 2178கன அடி தண்ணீர் வெளியேற்ற பட்டு வருகின்றன.

77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 56.6அடியை எட்டியுள்ளது,18அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு ஒன்று 14.2 அடியாக உயர்ந்துள்ளது ,சிற்றாறு இரண்டு 14.3 அடியாகவும் உயர்ந்துள்ளது தொடரும் மழை மற்றும் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.

Tags

Next Story