உபரி நீர் திறப்பு நிறுத்தம் - திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

உபரி நீர் திறப்பு நிறுத்தம் - திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றபட்டது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் கடந்த எட்டு தினங்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் திரும்ப சென்றனர் .

இந்த நிலையில் உபரி நீர் திறப்பு நிறுத்த பட்டதோடு மழையும் குறைந்த காரணத்தால் அருவியில் இன்று முதல் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது இதனால் அருவியில் காலை முதலே நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர் இதன் காரணமாக இந்த பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கோடை விடுமுறை என்பதால் உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது

Tags

Next Story