மருந்தகங்களில் கண்காணிப்பு கேமரா - ஆட்சியர் உத்தரவு

மருந்தகங்களில் கண்காணிப்பு கேமரா -  ஆட்சியர் உத்தரவு

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்ட மருந்தகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலையும், தடுக்கும் விதமாக “கூட்டு செயல் திட்டம்” வெளியிட்டுள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘H’, ‘H1’, மற்றும் ‘X’ அட்டவணை மருந்துகளை விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களின் உள்ளேயும், வெளியேயும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 133-ன் கீழ் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடப்பட்டுள்ளார்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், மருந்தகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவு செயல்பாடுகளை, மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு அதிகாரிகள் / குழந்தை நல காவல் அதிகாரிகள் அவ்வபோது சரிபார்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக மருந்தகங்களில் போதை மாத்திரைகள் , ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக இருந்த நிலையில் இதனை பெரிதும் வரவேற்போம்.

Tags

Next Story