சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

கண்காணிப்பு கேமரா பொருத்தம்

சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தபட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் கண்காணிப்பு கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம்,

மாவட்ட பொதுபார்வையாளர், தேர்தல் அலுவலர் ஆகியோர் வாக்குச்சாவடிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் நாளை தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள்,

ஆசிரியர்கள் என 16 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் தமிழக போலீசார், கர்நாடக, ஆந்திரா மாநில ஊர்க்காவல் படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story