வல்லம் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பழுது

வல்லம் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பழுது

பழுது ஆன கேமரா

நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை உள்ளது. ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள்,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர். நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறியவும், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வல்லம் அடுத்த, வடகால் சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.

இதனால், குற்ற சம்பவங்கள், மற்றும் விபத்து ஏற்படும் போது, போலீசார் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags

Next Story