கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம்

தென்னிலை லட்சுமி மஹாலில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது.
தென்னிலை லட்சுமி மஹாலில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு ஊராட்சி மற்றும் மேற்கு ஊராட்சி பகுதிகளில் பரமேஸ்வரி மற்றும் சாந்தி நிறுவனங்களின் சார்பில், சாதாரண கல்குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தென்னிலை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு, கல்குவாரி அமைப்பதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பதிவு செய்யப்பட்ட அனைத்து கருத்துகளையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story