சேந்தமங்கலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வளர்ச்சித் திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
எருமப்பட்டி, சேந்தமங்கலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆட்சியர் ச.உமா தொடர் ஆய்வு எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவக்காரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் விபரங்கள், முட்டாஞ்செட்டி பகுதியில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். காவக்காரப்பட்டி ஊராட்சி, வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை குறித்தும் பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வடவத்தூர் ஊராட்சியில் ஜம்புமடை, எம்.மேட்டுப்பட்டி ஊராட்சியில், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வாழவந்திகோம்பை ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story