வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு 

 தஞ்சாவூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள, குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி, வாக்கு எண்ணும் மையத்தினை தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கான பொதுப் பார்வையாளர் கிகேட்டோ சேம, காவல்துறை பார்வையாளர் மரு.எஸ்.டி.சரணப்பா, ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில், மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய வாக்கு எண்ணும் மையத்திற்கான பூர்வாங்கப் பணி எதிர்வரும் ஜூன்.4 (செவ்வாய் கிழமை) அன்று மேற்கொள்ளவுள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, மார்ச்.27 (புதன் கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர் மற்றும் காவல்துறை பார்வையாளர் ஆகியோருடன், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப் பணித்துறை போன்ற துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story