வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் ஓ. முத்தலாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கிராமத்தில் உள்ள பெரிய கன்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் புகுந்தது, இதன் காரணமாக அந்த கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள காவல்துறையினர் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வெள்ளை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதை சுற்றியுள்ள சேர்வைக்காரன்பட்டி மற்றும் உப்போடை கிராமத்தில் அதிகளவு வெள்ள நீர் செல்வதால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் தெரிவித்து 175 நபர்களை மீட்டு சேர்வைக்காரன் பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இடங்களை மதுரை சரக காவல் துறை துணை தலைவர் ரம்யா பாரதி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் கருன் காரட் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.