நாகை கலெக்டர் ஓர்குடி வயல்களில் ஆய்வு    

நாகை கலெக்டர் ஓர்குடி வயல்களில் ஆய்வு    

Mavatta ஆட்சியர் ஆய்வு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வயல்களில் பாசனம் செய்யப்படுகிறதா நாகை கலெக்டர் ஓர்குடியில் வயலில் ஆய்வு செய்தார்    

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வயல்களில் பாசனம் செய்யப்படுகிறதா நாகை கலெக்டர் ஓர்குடியில் வயலில் ஆய்வு. டெல்டா மாவட்டத்திற்கு குறுவை, சம்பா தாளடி சாகுபடிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்து .அறுவடை முடிந்து உழவு செய்து தாளடி நெல் சாகுபடி நேரடி நெல்வதைப்பு செய்திருந்தனர். 100 முதல் 110 நாள் வயதுடைய நெல் ரகங்களை தாளடியாக - விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது 60நாட்கள் முதல் 80நாட்கள் வயதுடைய பயிர்களாக தண்டு உருளும் பருவம் தொண்டை கதிர் பருவம் மற்றும் கதிர்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. இந்நிலையில் நெற் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால்தான் பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும் என்ற நிலையில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இநத நிலையில், மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் ஆற்றில் நீர் வரத்தின்றி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டத்திற்கு தாளடி நெல் காப்பாற்றுவதற்காக இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டம் வந்தடைந்து தற்போது நெல் பயிருக்கு பாசனம் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வடக்கு வெளி, ஓர்குடி, பூலாங்குடி பகுதிகளில் வயல் பகுதிக்கு சென்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு தாளடி நெல் பயிருக்கு பாசனம் செய்யப்படும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்களா, தற்போது திறக்கட்டட தண்ணீர் பே துமானதாக உள்ளதா, தண்ணீர் தடைப்பட்டுள்ளதா என நாகட்ட்டினம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

வெண்ணாறு வடி நிலை கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிசெயற்பொறியாளர் கமலகண்ணன், பெரம்பளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கீதா, கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ், கீழ்வேளூர் வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன், கீர்வேளூர் வேளாண்மை அலுவலர் ராஜலெ ட்சுமி ஆணை மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story