காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு
X

தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

காஞ்சிபுரத்தில் கோடை விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் வாகனங்களின் இருக்கைகள்,அவசர உதவி கதவுகள்,முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் வேன்கள் உள்ளிட்டவைகளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தி வருகிறது. பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை,வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 45 தனியார் பள்ளிகளின் 307 பேருந்துகள் மற்றும் வேன்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைக்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையிலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற,

இந்த பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாமில் தனியார் பள்ளி வாகனங்களில் உள்ள இருக்கைகள்,அவசர உதவி கதவுகள்,முதலுதவி பெட்டிகள்,வேகக்கட்டுபாட்டுக் கருவி, தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து போக்குவரத்து துறை,

பள்ளிக்கல்வி துறை,தீயனைப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இவ்ஆய்வின்போது தேர்வு பெறாத வாகனங்கள் மீண்டும் சீரமைத்துக் கொண்டு வர திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story