மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஆய்வு
கன்னியாகுமரியில் சமீபத்தில் பெய்த மழையால் பள்ளிகளில் தண்ணீர் புகுந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட கலெக்டர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை சீற்றத்தினால் பள்ளிகளில் மழைவெள்ளம் புகுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளிகளை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தென்தாமரைக்குளம் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் சிறப்புபள்ளி திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் பாலதாண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story