மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுப்பு!

விராலிமலையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் சேதமடைந்த விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

விராலிமலை வட்டாரப் பகுதிகளில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்த விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. விராலிமலையை அடுத்த ராஜாளிபட்டி ஊராட்சி பாட்னா பட்டி, கோனார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.

இந்நிலையில், அந்த வயல்களில் நவரை பருவத்தில் நடவு செய்துள்ள கோ 43, ஐ ஆர் 50, சதாயு நெல், மஹிந்திரா 606 உள்ளிட்ட நெற்பயிற்கள் தற்போது வளர்ந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தது.இந்தச் சூழலில், விராலிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் பெய்த கோடை மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி முளைக்கத் தொடங்கின. இதுகுறித்த செய்தி வியாழக்கிழமை (மே 23) தினமணியில் வெளியானது. இதைத் தொடர்ந்து வேளாண்மை அலுவலர்கள் சனிக்கிழமை பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு எடுத்துவருகின்றனர்.

Tags

Next Story