கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு..!

கணக்கெடுப்பு பயிற்சி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிய வேண்டும்.
இதேபோன்று அவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள் எவை எவை என கண்டறிந்து அதற்கேற்றவாறு அதனை உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நல திட்ட உதவிகளை அறியும் வகையில் அவர்களுக்கு விளக்க வேண்டும். இதில் கோட்டாட்சியர் பானு, தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
