லத்தேரி பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம், லத்தேரி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் லத்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மாணவ மாணவிகளை புத்தகங்களை வாசிக்க வைத்து மாணவர்களின் வாசிப்பு திறனையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவையும் ஆட்சியர் பரிசோதித்தார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story