சூரிய நமஸ்காரம் போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்பு

சூரிய நமஸ்காரம் போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்பு
சூரிய நமஸ்காரம் போட்டிகள், மாணவர்கள் பங்கேற்பு
ரதசப்தமியான சூரிய நமஸ்காரம் போட்டிகளை மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுபாக்கம் திரிநேத்ரதாரி யோகா பயிற்சி நிலையம் மற்றும் அச்சிறுபாக்கம் மலை நகர லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் ரதசப்தமியான சூரிய நமஸ்காரம் போட்டிகளை மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து 400 -க்கும மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 50, 75, 108 என மூன்று பிரிவுகளில் சூரிய நமஸ்காரம் போட்டிகள் நடைபெற்றது.பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கலந்து கொண்டு செய்தனர்.

இந்த விழாவில் திருவாடுதுறை ஆதினத்தின் சட்ட ஆலோசகர் ஜி.ஜெயச்சந்திரன், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் தலைமை சிவாச்சாரியார் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

Tags

Next Story