மகுடஞ்சாவடியில் தொடர் திருட்டு - கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை

X
மகுடஞ்சாவடியில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
மகுடஞ்சாவடியில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
சேலம் மாவட்டம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுண்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற அவர் இன்று வழக்கம்போல் கடையை திறக்க வந்து பார்க்கும் பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த 80,000 ஆயிரம் ரொக்க பணமும் சர்வீஸ் கொடுக்கப்பட்டிருந்தா விலை உயர்ந்த மூன்று செல்போனங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதேபோல் இவரது செல்போன் கடைக்கு அருகேயுள்ள கிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் 70 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் திருட்டுப் போய் உள்ளன இதனை தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளன.இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மகுடஞ்சாவடி பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
Next Story
