மக்களின் பிரச்னைகளை பேசியதற்காக 4 முறை சஸ்பெண்ட் - மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்றத்தில் மக்களின் குறைகளை கேட்டதற்காக நான்கு முறை தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாடடி விழாவை தொடங்கி வைத்தார்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி தமிழகத்தில் திமுக அரசு விலை வாசியை குறைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தாலும் மத்திய பிஜேபி அரசு விலைவாசியை உயர்த்துவதிலும் பெரும் பணக்காரர்களான அத்தாணி அம்பானிக்கு கடன் தள்ளுபடி செய்து வருவதாகவும், தற்போது வரை 17 லட்சம் கோடியை கடன் தள்ளுபடி பெரும் பணக்காரர்களுக்கு மத்திய பிஜேபி அரசு செய்திருப்பதாக குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர் மேலும் ஏழைகளின் விலைவாசி கூடிக் கொண்டே போவதாகவும், தமிழகத்தில் 100 நாள் வேலையை 150 நாட்களாக அல்லது 200 நாட்களாகவோ உயர்த்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும் இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்க்கட்சி எம்பி ஆக இருந்து பாராளுமன்றத்தில் நான்கு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் மக்களின் குறைகளை கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்தார் . மேலும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து உங்களுடைய பிரதிநிதியாக சென்ற நான் என்னுடைய கடமையை செய்திருப்பதாக நம்புவதாகவும் மக்களாகிய நீங்கள் கொடுத்த பணியை தான் செய்திருப்பதாகவும் அந்த மன நிறைவு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவ ஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எ ஆர் ஆர் சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story