பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் அணைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரி வந்தனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மார்ச் 20ம் தேதி வரை தண்ணீர் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. மார்ச் 15ம் தேதிக்கு பிறகு பயிர்களுக்கு தேவைப்படின் தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.
Next Story