எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மோகனூர் அருகே உள்ள எஸ். வாழவந்தியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் எஸ். வாழவந்தி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 18 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட .கோவில் ஆகும், ஆண்டுதோறும் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9 ந்தேதி, திங்கட்கிழமை எஸ்.வாழவந்தி சந்தையில் அல் எடுத்து 10 ந்தேதி செவ்வாய்க்கிழமை ,அதிகாலை 6 மணி அளவில் கம்பம் ஊன்றி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது, தொடர்ந்து சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கம்பத்திற்கு ஊற்றி வணங்கினார்கள்,தொடர்ந்து 15 ஆம் தேதி திங்கட்கிழமை மறுக்காப்பு கட்டப்பட்டு, தினசரி சுவாமி இரவு திருவீதி வரும் உலா நிகழ்ச்சி நடைபெற்றது, ஏப்ரல் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வடி சோறு பூஜை நடைபெற்று , ஏப்ரல் -22 திங்கள் கிழமை அதிகாலை 3 மணி அளவில் மாவிளக்கு பூஜை நடைபெற்று, கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டு சுவாமி பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றிற்கு எடுத்துச் சென்று, புனித நீராடி சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து,

அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சுவாமியை சப்பரத்தில் பக்தர்கள் தூக்கி கொண்டு நடந்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் தீமிதித்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்கள், காலையில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், உருளு தண்டம், செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள், நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு கிடா வெட்டும் நடைபெறும், காலை 10 மணி அளவில் சுவாமி 30 அடி உயரம் கொண்ட தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்று, மாலை 5 மணியளவில் தேர் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

புதன்கிழமை அதிகாலை கம்பம் பிடுங்கி சிங்கார பாலியில் விடப்படும் தொடர்ந்து மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும், விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story