காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் சுவாமித்தோப்பில் சுவாமி தரிசனம் !

காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் சுவாமித்தோப்பில் சுவாமி தரிசனம் !
 விஜய் வசந்த் எம்.பி
இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் குமரியில் பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வழிபாடு செய்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று குமரியில் பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து சாமிதோப்பு அய்யாவழி தலைமை பதி நிர்வாகிகள் குருமார்களான பாலபிரஜாபதி அடிகளார், சுவாமி, ராஜசேகர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றார்.

Tags

Next Story