சர்க்கரை வள்ளி கிழங்கு அறுவடை தொடக்கம்
சர்க்கரை வள்ளி கிழங்கு
தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சர்க்கரைவள்ளி கிழங்கு தற்போது அறுவடை பருவத்திற்கு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி.செய்யப்பட்டுள்ளது. இனிப்பு சுவை மிகுந்த சர்க்கரை வள்ளி கிழங்கு, சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்கின்றனர்.
மாவட்டத்தில், தர்மபுரி,நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், கடத்தூர், ஏரியூர், பாப்பிரெட்டிப்பட்டி,அரூர், மொரப்பூர் உள்ளிட்ட வட்டாரங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கு தற்போது அறுவடை பருவத்திற்கு வந்துள்ளது. மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு தேவை அதிகரிக்கும். தற்போது தள்ளுவண்டி, வாகனங்களில் வைத்து சர்க்கரைவள்ளி கிழங்கு விற்பனை செய்யப்படுகின்றது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை வள்ளிகிழங்கு ரூ.728-க்கு விற்பனை செய்யப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.