இனிப்புகள் வழங்கி விசிகவினர் கொண்டாட்டம்
மாநில கட்சி அந்தஸ்தை பெற்றதை சூளகிரியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விசிகவினர் கொண்டாடினர்.
2 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் வென்ற விடுதலைச் சிறுத்தைகள், மாநில கட்சி அந்தஸ்தை பெற்றதை சூளகிரியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய கொண்டாடிய விசிகவினர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட விசிகவின் தலைவர் திருமாவளவன், எழுத்தாளர் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஒரு மாநிலத்தில் 25 எம்பிகளுக்கு ஒரு எம்பி வீதம் வெற்றி பெற்றாலோ, வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 8% வாக்குகளை பெற்றாலோ அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்கிற அந்தஸ்தை பெற முடியும் விசிக 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனி சின்னத்தில் பெற்றிருப்பதால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்கிற அந்தஸ்தை பெற உள்ளது அதிமுக, திமுகவை தொடர்ந்து தமிழகத்தில் இந்த அந்தஸ்தை விசிக, நாம் தமிழர் கட்சி பெற உள்ளது.
ஏற்கனவே பாமக,தேமுதிக,மதிமுக ஆகிய கட்சிகள் மாநில கட்சி என்கிற அந்தஸ்தை இழந்தவை என்பது குறிப்பிடதக்கது. விசிக மாநில கட்சி என்கிற அந்தஸ்தை பெற உள்ளநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..