நாமக்கல்லில் நீச்சல் பயிற்சி

நாமக்கல்லில் நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சி

நாமக்கல்லில் மே 21 வரை நான்காம் கட்டமாகவும் மற்றும் மே 23 முதல் ஜூன் 03 வரை ஐந்தாம் கட்டமாகவும் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து மே 21 வரை நான்காம் கட்டமாகவும் மற்றும் மே 23 முதல் ஜூன் 03 வரை ஐந்தாம் கட்டமாகவும் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும்.

தினசரி நீச்சல் பயிற்சி முகாம் காலை 6.00 மணி முதல் 07.00 மணி வரை, 07.00 மணி முதல் 08.00 மணி வரை, 08.00 மணி முதல் 09.00 மணி வரையும் மேலும், மாலை 4.00 மணி முதல் 05.00 மணி வரை, மற்றும் 5.00 மணி முதல் 06.00 மணி வரை என்ற 1 மணி நேர இடைவேளையில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மே 10 முதல் மே 21 வரை நான்காவது கட்ட பயிற்சி பெற விரும்புவோர் அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 12 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.1,416/- ஆகும். இத்தொகையினை இணையவழி மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும்.

இனி வருங்காலங்களில் நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தயாராவதற்கும், நீச்சல் (Learn to Swim) பயிற்சி முகாம் வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59/- செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் அல்லது 85086 41786 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story