சின்னம் பொருத்தும் பணி டி.ஆர்.ஓ., ஆய்வு

சின்னம் பொருத்தும் பணி டி.ஆர்.ஓ., ஆய்வு

டி.ஆர்.ஓ., ஆய்வு

சங்கராபுரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி டி.ஆர்.ஓ., ஆய்வு.
சங்கராபுரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணியை டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார். சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் உள்ள 300 ஓட்டுச்சாவடி மையங்களில் 720 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 360 கட்டுப்பாட்டு கருவிகள், 390 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம், வேட்பாளர் பெயர், படம் ஆகியவை பொருத்தும் பணி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. இப்பணியை டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், தனி தாசில்தார்கள் பசுபதி, ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜ், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், மண்டல துணை தாசில்தார் ராமசாமி, தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை, மற்றும் வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.ஏ.ஓ., ராஜலட்சுமி உடனிருந்தனர்.

Tags

Next Story