விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சிம்போசியம் விவேகா ஜெஸ்ட் 2024

விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சிம்போசியம் விவேகா ஜெஸ்ட் 2024

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் சிம்போசியம் விவேகா ஜெஸ்ட் 2024

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் சிம்போசியம் விவேகா ஜெஸ்ட் 2024


திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட்இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி துறைகளின் சார்பாக டெக்னிக்கல் சிம்போசியம் விவேகா ஜெஸ்ட் 2024 நடைபெற்றது திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி துறைகளின் சார்பாக டெக்னிக்கல் சிம்போசியம் விவேகா ஜெஸ்ட் 2024 நடைபெற்றது . இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் டாக்டர்.KCK. விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். இதில் 35 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு அவர்களின் அறிவு திறமையை பரிமாறிக் கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ப்ராடக்ட் டெவலப்மெண்ட், சோகோ கார்ப்பரேஷன் டைரக்டர் ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு மாணவிகள் எப்படி தன்னம்பிக்கையுடனும், போராடும் குணத்துடனும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று எடுத்துரைத்தார். மேலும் ஆர்வம், அர்ப்பணிப்பு, அறிவு, மற்றும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் முறையை சரியாக கையாண்டால் வாழ்க்கையில் எதையும் வெல்லலாம் என்று கூறினார். இந்த விழாவில் துறைத்தலைவர்கள் டாக்டர் சாய்குமார், டாக்டர் பூங்கொடி, டாக்டர் ராதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக மூன்றாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி துறை மாணவி தேவதர்ஷினி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story