பெரம்பலூரில் டேக்வாண்டோ போட்டி

பெரம்பலூரில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த டேக்வாண்டோ வீரர்கள் 350 பேர் பங்கேற்றனர்.

புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, பெரம்பலூர் ரோட்டரி சங்கம், பெரம்பலூர் காட்டன் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகியோர் இணைந்து, 6 மாவட்ட வீரர்களுக்கான டேக்வாண்டோ ஒரு நாள் போட்டி, பெரம்பலூர் அடுத்துள்ள சிறுவாச்சூர் அருகே . ஸ்ரீ ராமகிருஷ்ணாகல்லூரி அரங்கில் தொடங்கி நடைபெற்றது,

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன்,ரோட்டரி மாவட்ட ஆளுநர் கார்த்திக் ஜெயராமன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர் போட்டியில், 14, 17, 19, வயது உடையோர்க்கான பிரிவில், 34 வகை எடை பிரிவில் மாணவர்களுக்கும், 35 வகை எடை பிரிவில் மாணவிகளுக்கும் இப்போட்டி நடத்தப்பட்டன, இதில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த டேக்வாண்டோ வீரர்கள் 350 பேர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினார்கள்

, ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக, திறந்தவெளி ஆட்டமாக நடைபெற்ற இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு, பரிசு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன போட்டி நடுவர்களாக மாஸ்டர்கள், கோயம்புத்தூர் மணிகண்டன் புதுக்கோட்டை வனிதா, முத்து முருகேசன், அகிலா மனோஜ் குமார் சுஜிதா ராஜ்குமார் காரைக்குடி பிரவீன் வெங்கட் சென்னை பார்த்திபன் சிவகங்கை கிருஷ்ணன் ஹரி கிருஷ்ணன் ஆகாஷ் பெரம்பலூர் மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியில் வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் பெரம்பலூர் ரோட்டரி சங்க செயலாளர் அருணகிரிநாதன், தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் இதில் திரளான டேக்வாண்டோ வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story