தையல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
தையல் தொழிலாளி
காரைக்குடியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தையல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள நாச்சிலியந்தலைச் சேர்ந்த தையல் மிஷின் பழுது பார்க்கும் வேலை செய்யும் குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசோக் லாட்ஜில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி அங்கு மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த16 ஆம் தேதியில் இருந்து ரூம் போட்டு தங்கியிருந்த குமார் தொடர்ச்சியாக மது அருந்தி வந்ததாகவும் இன்று காலை லாட்ஜ் பணியாளர்கள் பொது கழிவறை பக்கம் சென்று பார்த்தபோது அங்கு குமார் தலையில் ரத்த காயத்துடன் கிடந்துள்ளார். உடனடியாக காரைக்குடி தெற்கு காவல் துறையினருக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் குமார் தங்கியிருந்த அறையை சோதனை செய்ததில் அவரது தலையணைக்கு அடியில் 37 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. குமாரின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாட்ஜ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story