ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்

ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்களின் ரங்கா.. ரங்கா.. கோஷம் முழங்க, தைத் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்களின் ரங்கா.. ரங்கா.. கோஷம் முழங்க, தைத் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடத்தில் மூன்று திருத் தேரோட்டங்கள் நடைபெறுகிறது. ஸ்ரீ ராமருக்கு குலதெய்வமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைத் தேரோட்டம் நடைபெறும். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய தைத்தேர் உற்சவத்தில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இன்று முக்கிய திருவிழாவான தைத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ரங்கா……ரங்கா … கோவிந்தா… ரங்க பிரபு… காவிரி ரங்கா என்ற கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர் . ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் தைத் திரு தேரில் மட்டுமே எழுந்தருளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தைத்தேர் பவனி வரும் காட்சியை காண ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது

Tags

Next Story