நாகையில் உலக அமைதிக்காக பால்குடம் எடுத்து வழிபாடு
நாகையில் உலக அமைதிக்காகவும் மீன் வளம் பெருக வேண்டியும், அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற வேண்டியும் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
நாகையில் உலக அமைதிக்காகவும் மீன் வளம் பெருக வேண்டியும், அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற வேண்டியும் பால்குடம் எடுத்து வழிபாடு செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் : தை மாத கடை ஞாயிறை முன்னிட்டு முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், மீன் வளம் பெருக வேண்டியும், அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற வேண்டியும் நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராம மீனவர்கள் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
நம்பியார் நகர் அருள்மிகு புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 1008 மீனவ பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் தொடங்கியது. ஆலயத்தில் இருந்து கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மீன் கொடியினை கையிலேந்தி சீர்வரிசை தட்டுகலுடன் ஊர்வலமாக சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது தலையில் பால் குடத்தை சுமந்து ஏழைப் பிள்ளையார் கோவில், புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தனர். அப்போது அவர்கள் எடுத்துவந்த பாலினை நீலாயதாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.