புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சியில் புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர் கிருபா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி, நேர்முக உதவியாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் ரவி முன்னிலை வகித்தனர்.

சுகாதார ஆய்வாளர் விக்னேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பின் விளைவுகள், வியாதிகள் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

விதிகளை மீறி விற்பனை செய்வது தெரிந்தால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கடைக்கு சீல் வைக்க பரிந்துரை செய்யப்படும் என கூறப்பட்டது. தொடர்ந்து, புகையிலை பொருட்களின் தீமை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருந்தாளுநர் சுதா, செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் பாலா நன்றி கூறினார்.

Tags

Next Story