ஊருக்கே அடைக்கலம் தரும் விடியங்காடு புளியந்தோப்பு

ஊருக்கே அடைக்கலம் தரும் விடியங்காடு புளியந்தோப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள விடியங்காடு புளியந்தோப்பு கிராமத்தினரின் பொழுதுபோக்கு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.


ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள விடியங்காடு புளியந்தோப்பு கிராமத்தினரின் பொழுதுபோக்கு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள விடியங்காடு கிராமம், ஆந்திர மாநில மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து விடியங்காட்டிற்கு நீர்வரத்து உள்ளது. விவசாயம் மற்றும் நெசவு தொழில் இந்த கிராமத்தில் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. கிராமத்தின் நடுவே விநாயகர் கோவிலின் பின்புறம் புளியந்தோப்பு உள்ளது. பழமையான இந்த தோப்பில், கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.

வானுயர்ந்த மரங்களுக்கு இடையே, சிறுவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தினர் தங்களின் ஓய்வு நேரத்தில் இங்கு கூடி பேசி மகிழ்கின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக சில மரங்கள் பட்டுபோனாலும், புதிய மரக்கன்றுகளை கிராமத்து இளைஞர்கள் நட்டு பராமரித்து வருகின்றனர். இதனால், இந்த தோப்பு பசுமை குன்றாமல் செழிப்பாக காணப்படுகிறது. பயனுள்ள இந்த தோப்பு, கிராமத்தினரின் பொழுதுபோக்கு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

Tags

Next Story