புளிய மரங்கள் ரகசிய ஏலம்; விசாரணை செய்ய கோரிக்கை
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம்,மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லம்பள்ளியில் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தருமபுரி, சேலம் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பாலம் அமைக்கும் 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாலத்திலிருந்து செல்லும் கழிவு நீர் இந்த சாலையில் கால்வாய் இலளிகம் நல்லம்பள்ளி ஜங்ஷன் சாலையில் வட்டார அருகே நெடுஞ்சாலை வளர்ச்சி அலுவலகம் அருகே சென்று ஏரியில் அது கலக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் பணிக்காக நல்லம்பள்ளி இலளிகம் செல்லும் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த சாலை பணிக்காக விரிவாக்க சாலை ஓரங்களில் பழமை வாய்ந்த புளிய மரங்கள் இருந்து வருகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு புளிய மரமும் 40 டன்னுக்கு மேல் உள்ள நிலையில். நெடுஞ்சாலை துறை சார்பில் முறையாக அறிவிப்பு வெளியிட்டு ஏலம் விடாமல் ரகசியமாக 6-க்கும் மேற்பட்ட புளிய மரங்களை ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாகவும். இதனை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தி உள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யவேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.