பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும்: பன்னாட்டுக் கருத்தரங்கம் 

பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும்: பன்னாட்டுக் கருத்தரங்கம் 

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்

பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், மொழிபெயர்ப்புத் துறையில் “பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும்” என்ற தலைப்பில், வளர்தமிழ்ப் புலத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவின் துவக்கமாக, மொழிபெயர்ப்புத் துறையின் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் இரா.சு.முருகன் வரவேற்றுப் பேசினார். இதனைத் தொடர்ந்து, மொழிபெயர்ப்புத் துறையின் இணைப்பேராசிரியர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சௌ.வீரலெஷ்மி அவர்கள் கருத்தரங்க அறிமுக உரையாற்றினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் தலைமை வகித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து வளர்தமிழ்ப் புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியின் நிறைவாக, மொழிபெயர்ப்புத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் த.மீனாட்சி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து அமர்வுகளில் முதலாவதாக ‘ஆசிய மொழியியல்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கையின் ஆய்வுத் தகைஞர் பேராசிரியர் ந.நடராசப்பிள்ளை,

அவரைத் தொடர்ந்து ‘மலேசியப் புலம்பெயர் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் வளர்தமிழ்ப் புலத்தின் புல முதன்மையர் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன், அடுத்ததாக ‘அரபு இலக்கியங்களில் சமயத் தாக்கம்’ என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக அரபு மொழித் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் அ.ஜாகிர் ஹுசைன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அவரைத் தொடர்ந்து ‘சைனப் பண்பாட்டுப் புரட்சியும் இலக்கியப் போக்குகளும் - ஓநாய் குலச்சின்னம் நாவலை முன்னிலைப்படுத்தி’ மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை மேனாள் துறைத்தலைவர் பேராசிரியர் இ.முத்தையா, ‘ஆசிய மொழிகளில் நாட்டார் மரபு’ என்ற தலைப்பில் இணைய வழியாக இலண்டனைச் சேர்ந்த அனாமிகா பண்பாட்டு மையத்தின் பேராசிரியர் பால.சுகுமார் கருத்துரை வழங்கினார். மேலும் ‘சப்பானியப் புனைகதைகள்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த

கவிஞர். யவனிகா ஸ்ரீராம், ‘தமிழில் சென் கவிதை மரபு’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புத் துறையின் இணைப்பேராசிரியர் சௌ.வீரலெஷ்மி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக மாணவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவினை மொழிபெயர்ப்புத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இரா.சுஜாதா, நெ.யாழினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Tags

Next Story