தமிழீழ இனப்படுகொலை நினைவு நாள் - உப்பில்லா கஞ்சி வழங்கல்
தமிழீழ இனப்படுகொலை நாளான மே 18 நினைவு கூர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரிய வடகரை கிராமத்தில் மே 18 ம் தேதி வீரவணக்கம் செலுத்தப்பட்டு இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் உப்பில்லா கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .பகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் வேப்பந்தட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முகமது இக்பால் முன்னேற்பாட்டில் தொகுதி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகுரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்,
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் குருதி கொடை பாசறை சார்பாக குருதி கொடை பாசறை மாநில துணைத்தலைவர் மாணிக்கம் மற்றும் குருதிக்கொடை பாசறை மாவட்ட செயலாளர் விஜய் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மண்டல செயலாளர்கள் கிருஷ்ணசாமி தலைமையில், ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள். ஹமர்தின், பாலகுரு கோபிநாத் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள் இதில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சார்பில் பாரட்டு சான்றிதழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.