ராசிபுரத்தில் தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் மாவீரர் நாள் அனுசரிப்பு

ராசிபுரத்தில்  தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் மாவீரர் நாள் அனுசரிப்பு

தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் அனுசரிப்பு

ராசிபுரத்தில் தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

ராசிபுரத்தில் தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் நாள் அனுசரிப்பு.. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் போரில் இறந்ததை நினைவுகூரும் வகையில், ஒவ்வோரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி 'மாவீரர் நாள்' என அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் திமுக., முன்னாள் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் நகர வளர்ச்சி மன்ற தலைவர் வி. பாலு, தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் மாவீரர் நாளையொட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, பின்னர் மாவீரர் நாள் குறித்து கருத்துரை ஆற்றினார்.

இந்நிகழ்வில், விசிக,சேலம் ,நாமக்கல் மண்டல துணைச்செயலாளர் அரசன், சென்னை உயர் நீதி மன்றம் வழக்கறிஞர் கைலாஷ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் மணிமாறன், அதிமுக முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் V.சுந்தரம், விசிக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் கபிலன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரஅமைப்பாளர் சுமதி மதிவதனி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவேல் , விசிக,வென்னந்தூர் பேரூர் செயலாளர் நடராஜன், திமுக,முன்னாள் மாணவரணி அமைப்பாளர் மோகன்தாஸ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரசெயலாளர் பிடல் சேகுவேரா,

சிபிஐ இராசிபுரம் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் ராஜா, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தே.மு.தி.க மாவட்ட பிரதிநிதி வெங்கடேஷ், திவிக வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், திமுக,17 வது வார்டு பிரதிநிதி ஆட்டோ பெரியசாமி, திமுக 17 வது வார்டு கழககிளைச் செயலாளர் இளைஞரணி கார்த்திக், மற்றும் திமுக, விசிக, இ.கம்யூனிஸ்ட், சிபிஐ, திக மற்றும் தேமுதிக., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story