மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா!
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் செங்காந்தள் தமிழாய்வு மன்றம் மற்றும் செங்காந்தள் வாசகர் வட்டம் சார்பாக தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது. பத்தாம் வகுப்பு மாணவி அ.துர்கா வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் திருமதி உ.சுடரொளி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் செந்தில்குமார் அவர்கள் "சிந்திக்கப் பழகு "என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் கவிஞர் வே.து. வெற்றிச்செல்வன் அவர்கள் "உன்னால் முடியும் "என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் சு.பார்வதி பெ.தனலட்சுமி,இரா.வீரராகவன், ரா.பாண்டியராஜன், இரா.தீபா அவர்கள் ஒருங்கிணைத்தனர்.தமிழ்க்கூடல் நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி , கவிதைப் போட்டி,கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இரா. ஸ்ரீ சிவநிதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.பத்தாம் வகுப்பு மாணவி ச.மணிஷா நன்றியுரையாற்றினார்.
Next Story