முக்கண்ணாமலைப்பட்டி அரசுமேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா

X
தமிழ் கூடல் விழாவில் கலந்து கொண்டவர்கள்
முக்கண்ணாமலைப்பட்டி அரசுமேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது.
முக்கண்ணாமலைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது. விழாவிற்கு வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் வனிதா தலைமை தாங்கி சிறப்புறையாற்றினார்.
தொடர்ந்து பள்ளியின் தமிழ் மன்றம் சார்பில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி,பட்டிமன்றம், நடனப் போட்டி மற்றும் ஆங்கிலம் கலவா தமிழ்ச் சொற்களில் கலந்துரையாடல் ஆகிய போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags
Next Story
