தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பத்துார் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில குழு உறுப்பினர் தேவராஜ் தலைமையிள் ஆர்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் பழனி,குடியன் கோவிந்தராஜ், துரைராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சுந்தரேசன் கலந்து பேசினார் அப்போது, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு விவசாய தொழிலாளர்கள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் பேட்டி_ சுந்தரேசன் சிபிஐ மாவட்ட செயலாளர்
Next Story