சேலத்தில் தமிழ்நாடு போயர் பேரவை மாநாடு
போயர் பேரவை சமுதாய எழுச்சி மாநாடு
தமிழ்நாடு போயர் பேரவை சமுதாய எழுச்சி மாநாடு சேலம் 3 ரோடு வரலட்சுமி மகாலில் நடந்தது. மாநாட்டு தலைமை ஆலோசகர் கந்தசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பெரியபொண்ணு வரவேற்றார். மாநில தலைவர் டி.கே.மூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 13 வகை பிரிவுகளை ஒன்றிணைத்து சீர் மரபினர் பிரிவில் போயர் என்று ஒரே சாதியாக அறிவிக்க வேண்டும். போயர் இன மக்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு முதல்- அமைச்சர் போயர் இன மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டில் மாநில துணை செயலாளர்கள் நரசப்பன், சண்முகம், மாநில பொருளாளர் பெரியசாமி, துணை பொருளாளர் சந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில துணைத்தலைவர் ராஜா நன்றி கூறினார்.
Tags
Next Story