குமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டம் 

குமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரவை கூட்டம் 

வணிக சங்க பேரவை ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரியில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஆலோசனைக் கூட்டம், குமரி மாவட்டம் நாகர்கோவிலில் செட்டிகுளத்தில் நடந்தது. மாநில செயல் தலைவர் டேவிட்சன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ், மேற்கு மாவட்ட தலைவர் ஆசை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் சௌந்தரராஜன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மறையூர் கருப்பையா, மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி பழக்கடை ஜெகன், செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில் கோவையில் வருகிற மே 5-ம் தேதி நடக்கும் மாநில வணிகர் தன மாநாட்டில் சுமார் 1000 பேர் கலந்து கொள்வது, குமரி மாவட்டத்தில் சாலைகளின் நடுவே வைத்துள்ள சிமெண்ட் தடுப்பு சுவரால் பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சிமெண்ட் தடுப்புச் சுவரை அகற்றிவிட்டு மாற்று சுவர்கள் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் நடந்து வரும் நான்கு வழி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ஜாகிர் உசேன், உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story