தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

சங்ககிரி அருகே இடங்கணசாலை நகராட்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், இக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் நகராட்சித் தலைவர் கமலகண்ணன், துணைத் தலைவர் தளபதி உட்பட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story