சிவகாசியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

சிவகாசியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71 வது பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, திமுக கட்சியினர் கொண்டாட்டம்.....
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாநகர திமுக சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் 7வது வார்டு பகுதியில், மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், திருத்தங்கல் நகராட்சி முன்னாள் துணை சேர்மன் பொன்சக்திவேல், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story