சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், மேகதாட்டில் கர்நாடக அரசு அணைக்கட்டும் முயற்சியை கைவிடவும், கர்நாடகா அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளம், காண்மாய், பாசன வாய்க்கால்களை விரைந்து தூர் வாரிடவும். குறுவை சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஆதாரத்தை உறுதிப்படுத்திடவும், தற்போது டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் பி. கற்பனைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர். கே. சரவணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். பிரகாஷ் விவசாய சங்க நிர்வாகிகள் கீரப்பாளையம் தர்மதுரை, வாசுதேவன், புவனகிரி காளி. கோவிந்தராஜன், விதொச குணசேகரன், மணி, விதொச குமராட்சி ஜெயக்குமார், பரங்கிப்பேட்டை முருகன், அசோகன், உள்ளிட்ட நிர்வாகிகள் விவசாயிகள் திராளாக பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

Tags

Next Story